மாவட்ட செய்திகள்

ஐ.ஐ.டி. வளாக விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாக விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அடையாறு,

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சாஹில் கோர்மத் (வயது 23). இவர், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.

நேற்று காலை தான் தங்கி இருந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் சாஹில் கோர்மத், தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், இதுபற்றி கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக மாணவர் சாஹில் கோர்மத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு