அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு ஹூக்கா பார் இயங்குவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகேஷ்வர் ராய் (வயது 30) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூக்கா ஜாடிகள், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாரை நடத்தி வந்த சவுகார்ப்பேட்டையை சேர்ந்த பரோஸ் தலைமறைவாகிவிட்டார்.