மாவட்ட செய்திகள்

ஆழ்வார்திருநகரியில் பழுதடைந்த காமராஜர் சிலையை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்

ஆழ்வார்திருநகரியில் பழுதடைந்த காமராஜர் சிலையை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி பஜாரில் கடந்த 1988-ம் ஆண்டு அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில் கான்கிரீட்டாலான காமராஜர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதற்கு பதிலாக காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனைக் கண்டித்து, அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில், ஆழ்வார்திருநகரி பஜாரில் காமராஜர் சிலை முன்பு நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அகில இந்திய இளம் தமிழர் மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், காமராஜர் சிலை சீரமைப்பு குழு பொறுப்பாளருமான ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, வக்கீல் மகேந்திரன், நாடார் மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன்,

மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கருணாகரன், வட்டார தலைவர் கோதண்ட ராமர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மாநில துணை தலைவர் பூமிநாதன், தலைமை நிலைய செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர்கள் வில்சன், சாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆழ்வார்திருநகரி கிராமசாவடி அருகிலும் ஏராளமானவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்