மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் பயங்கரம்: ஆயுதங்களால் தாக்கி கால்சென்டர் ஊழியர் கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி கால்சென்டர் ஊழியரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் லோகேஷ் (வயது 26). இவர் கால்சென்டரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் லோகேஷ் வீட்டிற்கு புறப்பட்டார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதையடுத்து லோகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பெட்ரோல் காலியானதால் மோட்டார் சைக்கிள் நடுரோட்டில் நின்றது. இதனால் மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டே லோகேஷ் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் லோகேசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து லோகேசை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் லோகேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை விரட்டி சென்ற மர்மநபர்கள் ஆயுதங்களால் அவரை தொடர்ந்து தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் நடுரோட்டில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

இதுபற்றி அறிந்த ஆர்.டி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய லோகேசை மீட்டு பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் லோகேஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. லோகேசை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு