மாவட்ட செய்திகள்

பிவண்டியில், சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் பிடிபட்டனர்

பிவண்டியில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

தானே,

தானே மாவட்டம் பிவண்டியில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் செயல்பட்டு வருவதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பிவண்டியில் உள்ள 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது பல இடங்களில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் செயல்பட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கருவிகள், மடிக்கணினிகள், 438 சிம்கார்டுகள், செல்போன்கள், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நியாஸ் அகமது சேக்(வயது49), முகமது சகீர் மோமின்(25), உமர்கான் (24), அர்ஷத் சேக்(35), புஜில் சேக்(28), சாம்சேத் அன்சாரி(26), முகமது சேக்(29), அலிம் சேக்(28), நதிம் அலிசேக்(28) ஆகிய 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2 ஆண்டாக அவர்கள் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் நடத்தி அரசுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீதும் சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் கைதான 9 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது