அந்த வகையில் கடந்த 16-ந் தேதி ஒருநாள் மட்டும் சென்னையில் முக கவசம் அணியாத 1,278 தனிநபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 16-ந் தேதி நடைபெற்ற 7 பொது மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ரூ.26 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 6-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 48 ஆயிரத்து 33 தனிநபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 590 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.