மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினத்தந்தி

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெற்கு தெரு சாலையை தான் பத்தக்குடி, கொட்டாய்மேடு, ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின் கம்பம் மேலும் சாய்ந்து கீழே விழாதபடி மரக்கிளையை கொண்டு முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்த மரம் எந்த நேரம் வேண்டுமானாலும் தரையில் விழக்கூடும். அப்போது மின்கம்பம் தரையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சீரமைப்படுமா? என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், வள்ளுவக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்யாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பத்தக்குடி, கொட்டாமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சாய்வான நிலையில் உள்ளதால் அடிக்கடி கால்நடைகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள அனைத்து மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை