மாவட்ட செய்திகள்

தர்மபுரியில், கட்டிடத்தில் கம்பி கட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி சாவு

தர்மபுரியில் கட்டிடத்தில் கம்பி கட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி,

தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி(வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் தர்மபுரி அக்ரகார தெருவில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

அங்கு கட்டிட முதல் தளத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால்தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு