மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ‘வாட்ஸ் -அப்’ குழு அமைத்து கால்வாயை சீரமைத்த வாலிபர்கள்

எண்ணூர் சத்தியவாணி முத்துநகரில், இங்குள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் சத்தியவாணி முத்துநகரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வசிக்கின்றனர். இங்குள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும், கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், வாட்ஸ்-அப்பில் வி.ஐ.பி., என்ற பெயரில் குழு அமைத்தனர். அதன்மூலம் வாலிபர்களும், ஊர் நிர்வாகத்தினரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டினர். பின்னர் தங்கள் சொந்த செலவில் ஆட்களை வைத்து 17-வது தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாரும் முயற்சியில் நேற்று காலை ஈடுபட்டனர்.

வாட்ஸ்-அப் குழுவினர் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் முயற்சியால் மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்ட நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சுதாரித்துக்கொண்ட மாநகராட்சி துப்புரவு அதிகாரிகள், மழைநீர் கால்வாயில் தூர்வாரி வெளியே குவித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுகளை வாகனங்கள் மூலம் அகற்றி, அங்கு பிளச்சிங் பவுடர் போட்டு விட்டு சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு