மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுவாஞ்சேரி துனை மின்நிலையத்தின் முன்பு நேற்று மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

மின் வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஐ.டி.ஐ. படித்தவர்களை கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுவாஞ்சேரி துனை மின்நிலையத்தின் முன்பு நேற்று மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் எம். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஊழியர்கள் அனைவரும் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது