மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரியில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரெயில்கே கேட் மூடப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே கேட் மூடப்பட்ட இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணி தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது.

இதனால் மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றி வந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்து பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு