மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; மின் ஊழியர் சாவு

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் மின் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 54). மின் ஊழியர். இவருக்கு கீதா (46) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் பணி முடிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு முனுசாமி வீட்டுக்கு புறப்பட்டார்.

மின் நிலையத்தில் இருந்து ஜி.என்.டி. சாலைக்கு மோட்டார் சைக்கிளிள் திரும்பியபோது, அதே திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் காளிதாஸ் (29) என்பவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு