மாவட்ட செய்திகள்

ஓசூரில், செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து 2 வாலிபர்களிடம் பணம் பறிப்பு-3 பேர் கைது

ஓசூரில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, 2 வாலிபர்களை அடித்து, உதைத்து நிர்வாணப்படுத்தி படம் பிடித்து பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூர்:

ஓசூரில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, 2 வாலிபர்களை அடித்து, உதைத்து நிர்வாணப்படுத்தி படம் பிடித்து பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த 2 வாலிபர்கள், தங்களது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான ஒரு செயலி வழியாக ஓரினச்சேர்க்கையாளர்களை ஆன்லைனில் தனித்தனியாக தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களை தொடர்பு கொண்ட, மறுமுனையில் பேசிய நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி 2 வாலிபர்களும் தனித்தனியாக அவர் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி தங்களின் செல்போனில் படம் பிடித்தது.

பின்னர் அந்த காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும், குடும்பத்தினரிடம் தெரிவிப்பதாகவும் மிரட்டி, அச்சுறுத்தி 2 வாலிபர்கள் கையில் வைத்திருந்த பணத்தை அந்த கும்பல் பறித்தது.

3 பேர் கைது

மேலும் நாங்கள் அவ்வப்போது கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், அந்த 4 பேர் கும்பல் 2 வாலிபர்களையும் எச்சரித்தது. இதனால், பாதிக்கப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 33), சுனில் (28) மற்றும் ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூரில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த கும்பல், 2 வாலிபர்களை அடித்து, உதைத்து நிர்வாணப்படுத்தி படம் பிடித்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு