மாவட்ட செய்திகள்

இண்டூரில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

இண்டூரில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகிறார்.

பாப்பாரப்பட்டி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தர்மபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் சிவன். இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், இண்டூர் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவருடைய மகள் கவுசல்யா (வயது 19). என்பவருக்கும் ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கவுசல்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவுசல்யா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்