காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா எதிரொலியாக, மக்களை எச்சரித்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதத்தில் இருந்து நேற்று வரை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் என்று 7 ஆயிரத்து 181 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் போக மீதி உள்ள 5 ஆயிரத்து 173 வாகனங்கள் படிப்படியாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். இருப்பினும் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு போன்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபாட்டில்களை வாங்கும்போது சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அடையாள அட்டையை காண்பித்த பிறகு தான் மதுபாட்டில்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் உடன் இருந்தார்.