மாவட்ட செய்திகள்

கீழ்பென்னாத்தூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான பரிதாபம்

கீழ்பென்னாத்தூரில் நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தஞ்சான், விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்தில் விளைந்திருந்த உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக தனது மனைவி பாரதி மற்றும் மகள் காவியா (வயது 2) ஆகியோருடன் நிலத்திற்கு சென்றார்.

பின்னர் நிலத்தில் உளுந்து பயிரை அறுவடை செய்யும் பணியில் கணவன், மனைவி இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவியா, நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அறுவடை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக கணவன் - மனைவி இருவரும் மகளை தேடினர். அப்போது நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மகள் காவியா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் மகளை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்