கோவில்பட்டி:
மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தது. ரெயில் பயணிகளிடம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் சங்கரபாண்டியன், கணேசன், ஏட்டு அருண்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினா.
இதில், கோவில்பட்டி பாரதி நகர் முதல் தெரு வை சேர்ந்த செல்வராஜ் மகன் மாரிச் செல்வம் (வயது 26), வீரவாஞ்ஜி நகர் மாரியப்பன் மகன் மணி கண்டன் (வயது 20) ஆகியோர் தோள் பையில் 37 மது பாட்டில்கள் இருந்தது. அந்த மதுபாட்டில்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ரெயில்வே போலீசார், அந்த 37 மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அந்த 2 வாலிபர்களையும் கோவில்பட்டி மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்க நாயகியிடம் ஒப்படைத்தனர். அவர், அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.