மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதியில் ரூ. 19 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் - அசோக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி பகுதியில் ரூ. 19 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அசோக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள நேதாஜி சாலை சந்திப்பு, தினசரி மார்க்கெட், பெரிய மாரியம்மன் கோவில், கார் தெரு திருவண்ணாமலை சாலை சந்திப்பு, ராயக்கோட்டை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக சந்திப்பு ஆகிய 5 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அசோக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் நகரில் உள்ள சந்திப்புகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாஜலம், தமீசுல்லா, நெடுஞ்செழியன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்