மாவட்ட செய்திகள்

கூடங்குளம்–செட்டிகுளத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 10–ந் தேதி நடக்கிறது

கூடங்குளம்–செட்டிகுளத்தில் வருகிற ஜூலை 10–ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

நெல்லை,

கூடங்குளம்செட்டிகுளத்தில் வருகிற ஜூலை 10ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெல்லை தொழிலாளர் வருங்கால ரைப்புநிதி அலுவலகத்தின் மண்டல ஆணையாளர்1, சனத்குமார், வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் என்ற தலைப்பில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை வருகிற ஜூலை 10ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடத்துகிறார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம், மண்டல ஆணையாளர்1, வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. பி காலனி, நெல்லை1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த மனுவின் மேலே வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் மற்றும் மனுதாரரின் தொலைபேசி எம் ஆகியவற்றுடன் குறிப்பிட்டு வருகிற ஜூலை 2ந் தேதிக்குள் மேற்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஜூலை 10ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடங்குளம் அணுஉலை வளாகத்தில், கூடங்குளம் அணு உலைக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை செட்டிகுள் அனுவிஜய் டவுன்ஷிப் சாரல் ஸ்வரம் அரங்கத்தில், வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள்/ தொழிலதிபர்கள்/பிற ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்கும் குறைதீர்க்கும் கூட்டமும், அன்று மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெறும்.

ஏற்கனவே மனு அனுப்பியவர்கள் வருகிற 10ந் தேதி கூடங்குளத்தில் நடைபெறும் மேற்கண்ட அட்டவணைப்படி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டல ஆணையாளர்1 ஐ நேரில் சந்தித்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்