மாவட்ட செய்திகள்

திருவிளக்கு பூஜையில் கணவர் பங்கேற்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தனது தலைமையில் அய்யப்பன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் கணவர் பங்கேற்காத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரகு(வயது 50). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருடைய மனைவி கீதா(46). இவர்களுக்கு ஹேமலதா(20) என்ற மகளும், தீபக்(17) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கீதா தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார், கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், திருமுல்லைவாயல் தாமரை நகர் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கீதா தலைமையில் நடந்த இந்த பூஜையில் அவரது கணவர் பங்கேற்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்த கீதாவின் மாமனாரும், ரகுவின் தந்தையுமான கமலநாதன் அ.தி.மு.க. பிரமுகர் என்பதால் அமைச்சர் பாண்டியராஜன், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் கீதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு