மாவட்ட செய்திகள்

சாலமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள் பள்ளியின் உள்ளே அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். ஒரு சில நேரங்களில் மாணவ-மாணவிகள் வெளியே வந்து விடுகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு