மாவட்ட செய்திகள்

மிராரோட்டில் தாயை கொன்று மகன் தற்கொலை நிதி நெருக்கடியால் பரிதாபம்

நிதி நெருக்கடியால் தாயை கொலை செய்து மகன் தற்கொலை செய்த பரிதாப சம்பவம் மிராரோட்டில் நடந்து உள்ளது.

தானே,

தானே மாவட்டம் மிராரோடு, பிவர்லி பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் வசித்து வந்தவர் கேரளாவை சேர்ந்த வெங்கடேஷ்வர்(வயது42). இவருடன் தாய் மீனாட்சியுடன்(75) வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கடேஷ்வரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே செல்லமுயன்றார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

மேலும் பலமுறை தட்டிப்பார்த்தும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஹாலில் மீனாட்சியும், படுக்கை அறையில் வெங்கடேஷ்வரும் பிணமாக கிடந்தனர். போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்து மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.

அதில் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை என கூறப்பட்டு இருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு