மாவட்ட செய்திகள்

மும்பையில் 40 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் பெண் வாக்காளர்களுக்கு இலவச ‘நாப்கின்’ வழங்கப்படும்

நாடாளுமன்ற தேர்தலில் முழுக்க, முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

மும்பை,

மராட்டியத்தில் பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும், பெண்கள் அதிகாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நாடாளுமன்ற தேர்தலில் முழுக்க, முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இதன்படி மராட்டியத்தில் நடந்த முதல் மூன்று கட்ட தேர்தல்களிலும் 186 வாக்குச்சாவடிகள் முழுக்க, முழுக்க பெண்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.

இந்தநிலையில், மும்பையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளிலும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 26 வாக்குச்சாவடிகள் மும்பை புறநகரிலும், மற்றவை மும்பை நகரிலும் அமைகின்றன. பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்