மாவட்ட செய்திகள்

நாகையில், பரவலாக மழை தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது

நாகையில், பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக 10 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாகவே நாகையில் வெயில் தென்பட்டது. இருந்தும் இரவு, அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் 3 நாட்கள் மழை பெய்தது. பின்னர் வெயிலும், கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது.

பரவலாக மழை

இந்த நிலையில் நாகையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழையானது விட்டு, விட்டு மதியம் வரை பரவலாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக அக்கரைப்பட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் தெற்கு பொய்கை நல்லூர் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

அதேபோல வேளாங்கண்ணி, திருப்பூண்டி, சிக்கல், கீழ்வேளூர், நாகூர் திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு