மாவட்ட செய்திகள்

நாகர்கோவில், தக்கலையில் தேசிய கல்வி கொள்கையை கைவிடக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்வி கொள்கையை கைவிடக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாகர்கோவில், தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு கொரோனா காலத்தை பயன்படுத்தி கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, தங்க மதிப்பீடு கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட அவசர சட்டங்கள் மற்றும் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் நிறைவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கமோகன், அகமது உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தக்கலை

இதேபோல் இடதுசாரி கட்சிகள் சார்பில் தக்கலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சந்திர கலா, சி.பி.ஐ. மாவட்ட தலைவர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் தொடக்க உரையாற்றினார். இதில் அரங்கசாமி, பேபி, நிஷா, சிவமோகன், ஜாண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முரளிதரன் நிறைவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருங்கல் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு