மாவட்ட செய்திகள்

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.7½ கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி - கலெக்டர் மெகராஜ் ஆய்வு

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.7 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 8 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 15 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் 1,533 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக கிராமத்தில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்தாலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான குடிநீர் கிடைக்கும்.

ரூ.7 கோடியே 56 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டப்பணிகளை மரூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுபட்டி கிராம பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வீடுகளுக்கு குடிநீர் சீரான அழுத்தத்தில் கிடைக்க வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா?, குடிநீர் குழாய்கள் சரியான முறையில் பதிக்கப்பட்டு உள்ளனவா? மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீர் வழங்க தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் குடிநீர் சரியாக வருகின்றதா? என்று நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.

இந்த ஆய்வின்போது வீடுகளில் குடிநீர் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த நீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளனவா? என்று பார்வையிட்ட கலெக்டர் குடிநீர் தொட்டிகளை மூடிவைத்து தண்ணீரை பயன்படுத்த வேண்டும், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதால், தண்ணீர் பயன்படுத்தும் பாத்திரங்களை அவ்வப்போது கழுவி தகுந்த முறையில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, அசோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், கலைச்செல்வி, ஊராட்சி தலைவர் சுசீலா உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு