ஒட்டன்சத்திரம்,
நேற்று விருப்பாச்சி சாமியார்புதூர் சின்னகரட்டுப்பட்டி, பெரியகரட்டுப்பட்டி, ரெட்டியபட்டி தங்கச்சி அம்மாபட்டி, இருளகுடும்பன்பட்டி, சீரங்க கவுண்டன்புதூர், குட்டி நாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி, கொசவபட்டி, அம்பிளிக்கை, காவேரிஅம்மாபட்டி, அரசப்பிள்ளைபட்டி, உட்பட பல இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- என்னை கடந்த 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ளீர்கள் அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்பொழுது ஆறாவது முறையாக போட்டியிடுகிறேன் எனக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் கடந்த 25 ஆண்டுகளில் அடிப்படை வசதிக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என்றார். ஒட்டன்சத்திரம் பழனி சாலை சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து விருப்பாச்சி மேடு எந்த கனரக வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலையை மாற்றி சுமார் 5 கோடி செலவில் அந்த மேட்டை அனைத்து வாகனமும் செல்லக்கூடிய சாலையாக மாற்றி அமைத்தோம்.
நமது ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி கோபால்சாமி நாயக்கருக்கு விருப்பாச்சி கிராமத்தில் மணிமண்டபம் அமைத்தோம். மேலும் தியாகி கோபால் நாயக்கரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பெரியகோட்டை, ஓடைப்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, கொக்கரக்கள் வலசு, தாழையூத்து மேற்கண்ட உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பழனி செல்லும் பாதை யாத்திரை பக்தர்களுக்கு ரூ.6 கோடி செலவில் நடைபாதை அமைத்து கொடுக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, சத்திரப்பட்டி, பெரியகோட்டை, கள்ளிமந்தயம், தேவத்தூர், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விடுதி கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
மேலும் அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், இடையகோட்டை, சாமிநாதபுரம், சத்திரப்பட்டி, கீரனூர், ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம், புதிய காவலர் குடியிருப்பு கொண்டு வந்தது நமது ஆட்சிக்காலத்தில்தான். சத்திரப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் கூட்டுறவு வங்கி கொண்டு வந்தது நமது ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற மக்களுக்கு தேவையான நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
வருங்காலத்தில் மீண்டும் நமது ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரூ.530 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு ஆட்சி அமைந்தவுடன் வேலை தொடங்கப்படும்.
விருப்பாச்சி தாழையூத்து சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். அனைத்து மகளிருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். நத்தம், ஆத்தூர், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரி தொடங்கப்படும்ஒட்டன்சத்திரத்தில் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்படும் அனைத்து கிராமத்திலும் அடிப்படை வசதியான குடிநீர் சாலை வசதி சாக்கடை வசதி செய்து தரப்படும் என்றார்.
அனைத்து மக்க-ளின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். பிரசாரத்தின் போது தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.