மாவட்ட செய்திகள்

ஓட்டேரியில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி; 2 பேர் கைது

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 3 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திரு.வி.க.நகர்,

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவர், கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர் ஓட்டேரி கந்தசாமி கோவிலில் சாமி கும்பிட சென்றார்.

அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர், இவரிடம் கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2,200 மற்றும் செல்போனை பறித்தனர். அந்த வழியாக வந்த வடமாநிலத்தை சேர்ந்த மேலும் 2 பேரையும் தாக்கி, அவர்களிடம் இருந்தும் ரூ.240 மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்ற எத்திராஜ் (30) மற்றும் ஜான்சன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த னர்.விசாரணையில் இவர்கள், சம்பவத்தன்று காலை ஓட்டேரி கந்தசாமி கோவில் அருகே கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானத்தை வாங்கி குடிக்க சென்றனர். ஆனால் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால் மணிகண்டன் உள்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி, தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து கத்தி, ஆட்டோ, 2 செல்போன்கள் மற்றும் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளியான வேப்பேரியை சேர்ந்த ஆடு என்ற பிரபுவை (28) தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு