மாவட்ட செய்திகள்

பழையனூர் ஊராட்சியில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பழையனூர் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்லக்கூடியவர்களும் அவதியுற்றவாறு செல்கின்றனர். மேலும் மழைநீர் தேங்கி உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பழையனூர் ஊராட்சியில் தொற்று பரவும் அபாய நிலையிலுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT