மாவட்ட செய்திகள்

பெரியகுளத்தில்: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை - 2 வாலிபர்கள் கைது

பெரியகுளத்தில் கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் ஞானசேகரன் (வயது 19). இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவரும் நேற்று முன்தினம் சண்டை போட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (55), அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரும் சண்டையை விலக்கி விட்டார்கள்.

இந்த சமயத்தில் ஞானசேகரன், கார்த்திக்ராஜா மீது தென்னை மட்டையை தூக்கி எறிந்துள்ளார். அந்த மட்டை தவறுதலாக பழனியம்மாள் மீது விழுந்துவிட்டது. இதைப்பார்த்த பழனியம்மாள் மகனும் கூலித்தொழிலாளியுமான பெருமாள் (25), ஞானசேகரனை தட்டிக்கேட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர் ராஜபாண்டியன் (19) ஆகிய இருவரும் சேர்ந்து பெருமாளை கல்லாலும், தென்னை மட்டையாலும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த பெருமாளை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பெருமாளின் தந்தை கருப்பையா பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் மற்றும் ராஜபாண்டியனை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்