மாவட்ட செய்திகள்

பிவண்டியில் குடோனுக்கு தீ வைத்த தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

பிவண்டியில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் குடோனுக்கு தீ வைக்கப்பட்டது. இதில்,அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

தானே,

தானே மாவட்டம் பிவண்டி ரகனல் கிராமத்தில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் இருதரப்பினருக்கு இடையே நேற்று திடீரென மோதல் உண்டானது. இதில் அவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக மோதிக்கொண்டனர்.

அப்போது, மோதலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குடோனுக்கு தீ வைத்து விட்டனர். இதில், குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. குடோனில் தொழிலாளர்கள் சண்டையிட்டு தீ வைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் நவிமும்பை உரணில் உள்ள கன்டெய்னர்கள் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்