மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் கருப்பு சட்டையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 26 பேர் கைது

பாளையங்கோட்டையில் கருப்பு சட்டையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று காலை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திடீரென்று திரண்டனர். அவர்கள், கருப்பு சட்டையை எரித்து பெரியார், திராவிட கழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்து தெய்வத்தையும், இந்துக்களையும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் திராவிட இயக்கத்தை தடை செய்ய கோரி இந்த போராட்டம் நடந்தது. இதில் தென் மண்டல செயலாளர் ராஜா பாண்டியன், மகளிர் அணி தலைவி காந்திமதி, மாவட்ட மகளிர் அணி தலைவி லட்சுமி, நெல்லை மாவட்ட தலைவர் உடையார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் திருமலை நம்பி, மாநகர இளைஞர் அணி தலைவர் இசக்கி பாண்டி, ஒருங்கிணைப்பாளர் கணேசபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டம் நடத்திய ராஜா பாண்டியன், உடையார் உள்பட 26 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்று, தனியார் திருமண மண்டத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு