மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் கடைகள் இடிப்பு-ஆட்டோக்கள் உடைப்பு தட்டிக்கேட்ட 3 பேர் மீது தாக்குதல்

பாளையங்கோட்டையில் 5 கடைகளை இடித்துவிட்டு, அங்கிருந்த ஆட்டோக்களையும் மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட 3 பேரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 5 கடைகள் உள்ளன. இந்த கடைகள் தனிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பாளையங்கோட்டையை சேர்ந்த வைரவன் மரக்கடையும், தர்மராஜ் மற்றும் வேல்ஆசாரி ஆகியோர் ஒர்க்ஷாப்பும், பிச்சை பெருமாள் பழைய இரும்புக்கடையும் நடத்தி வருகின்றனர். இந்த கடைகளின் மூலம் கிடைக்கும் வாடகை பணம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு ஒரு கும்பல் 2 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் 5 கடைகளையும் இடித்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்கள், 2 ஆட்டோக்களையும் சேதப்படுத்தினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு