மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில், இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கு வங்காள முதல்-மந்திரிமம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் அனுராக் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு தலைவர் பொன்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவி வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மேற்கு வங்காள மாநிலம் முர்சி தாபாத்தில் 7 மாத கர்ப்பிணி உள்பட 3 பேரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் தொடர் படுகொலைகளை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திடீரென மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் நாகேந்திரன், கலாதரன், உடுமலை ரமணன், மலர் கொடி, ஸ்ரீவித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்