மாவட்ட செய்திகள்

பொறையாறில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்

பொறையாறில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

பொறையாறு,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி பொறையாறில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டரும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான சுரேஷ்குமார் தலைமை தாங்கி, பொறையாறு அய்யனார் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களிடம் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறும். வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். வாக்காளர்கள் அமைதியாக வாக்களிக்க பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு பிரெய்லி முறை போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தாசில்தார் சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜா, பாலாஜி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்