மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

மீன் பிடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

ராமேசுவரம்,

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த மார்ச் மாதம் முதல் மீன் பிடிக்க செல்லவில்லை. 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமும் தொடங்கியது. இதையடுத்து விசைப்படகுகள் மீன் பிடிக்கச்செல்லாமல் துறைமுக கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.

இந்தநிலையில் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தினர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை தற்போது வாங்க தயாராக இல்லாததால் ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முடிவு

இதனால் துறைமுக கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.வருகிற 15-ந்தேதி முதல் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்