மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 667 பேர் பாதிப்பு-11 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 667 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 11 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 667 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 11 பேர் பலியானார்கள்.

கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 795 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 306 பேர், சேலம் ஒன்றியத்தில் 38 பேர், ஓமலூரில் 37 பேர், வீரபாண்டியில் 35 பேர், ஆத்தூரில் 32 பேர், எடப்பாடியில் 26 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 22 பேர், சங்ககிரி, வாழப்பாடியில் தலா 21 பேர், நங்கவள்ளியில் 20 பேர், காடையாம்பட்டியில் 18 பேர், தாரமங்கலம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், தலைவாசலில் 10 பேர், கொளத்தூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், ஏற்காடு, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

853 பேர் டிஸ்சார்ஜ்

அவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 853 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 4 ஆயிரத்து 953 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

11 பேர் பலி

சேலத்தை சேர்ந்த 56, 59, 50, 58, 69, 61 ஆகிய வயதுடைய ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 78, 57 ஆகிய வயதுடைய ஆண்களும், 50, 66, 67 ஆகிய வயதுடைய பெண்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்கள். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை