மாவட்ட செய்திகள்

சேலத்தில் சாலையோரம் கிடந்த விஷ பாட்டில் மூடியை கடித்த சிறுவன் சாவு

சேலத்தில் சாலையோரம் கிடந்த விஷ பாட்டில் மூடியை கடித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் களரம்பட்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், தொழிலாளி. இவருடைய மகன் நதின் (வயது 3). இவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்னியாசிகுண்டு பகுதியில் சாலையோரம் கிடந்த விஷ பாட்டிலின் மூடியை எடுத்து கடித்து உள்ளான்.

பின்னர் திடீரென மயங்கி கீழே விழுந்த சிறுவன் நதினை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சாலையோரம் கிடந்த விஷ பாட்டிலின் மூடியை கடித்த போது அதில் இருந்த விஷம் பாய்ந்து சிறுவன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலம் களரம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது