மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரசபை 8-ம் வார்டுக்கு உட்பட்ட வடகாசியம்மன் கோவில் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது தண்ணீர் வினியோகம் சீராக இல்லாததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்நேரத்தில் நகராட்சி மூலம் டிராக்டரில் குடிநீர் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் குழப்பத்தில் திகைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி நேற்று சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள குடிநீர் தொட்டியை முற்றுகையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால், குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் நகரசபை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு