மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் பயங்கரம்: வாலிபர் அடித்துக் கொலை பெற்றோர் கைது

சங்கரன்கோவிலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 24). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடமும், அருகில் வசிப்பவர்களிடமும் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினமும் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். மேலும் மாட்டு தொழுவத்துக்கு தீவைக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தந்தை கண்ணன், தாய் பூமாரி ஆகியோர் மாரியப்பனை இழுத்து சென்று வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன், பூமாரி ஆகியோரை கைது செய்தனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்