மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் கழுத்து அறுபட்ட நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குங்குமராஜ். இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் சீனியர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சூரியகலா (வயது 41). இவர்களுக்கு சஞ்சய் (9), யுவகிருஷ்ணன் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சூரியகலா உடல் நலம் சரி இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குங்குமராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சூரியகலா அவரது மகன்கள் இருந்தனர் நேற்று காலை பக்கத்து வீட்டுக்காரர் கதவை தட்டி உள்ளார்.

அப்போது சஞ்சய் எழுந்து பார்த்தபோது படுக்கையில் தாய் சூரியகலாவை காணவில்லை. வீட்டில் தேடிய போது வீட்டின் பூஜை அறையில் சூரியகலா கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரியகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யபட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு