மாவட்ட செய்திகள்

தென்காசியில் காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தென்காசியில் காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தென்காசி,

தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகனா, சுடலை மற்றும் போலீசார் நேற்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த தென்காசி புதுமனை தெருவை சேர்ந்த முகம்மது காசியார் மகன் நூரில் அமீன் (வயது 38) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் போலீசார் நெல்லை மெயின் ரோட்டில் ஒரு குடோனில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றினர். தற்போது தென்காசியிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தடை செய்யப்பட்ட இந்த பொருட் கள் தொடர்ந்து இந்த பகுதியில் கடத்தி கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை தொடர் ந்து சந்தேகத்திற்கு இடமான சில இடங்களில் போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்