மாவட்ட செய்திகள்

செந்துறை, தத்தனூர், கீழப்பழுவூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

செந்துறை, தத்தனூர், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெரும் பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதேபோல் ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி, திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வில்சன் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நடுவலூர், கீழப்பழுவூர் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான, சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வென்மாண்கொண்டன், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசான்கோட்டை, தத்தனூர், த.பொட்டக்கொல்லை, மூர்த்தியான், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, சில்லக்குடி, மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு