மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை பெண்கள் பாலிடெக்னிக், மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி, தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை பெண்கள் பாலிடெக்னிக், மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அந்த மையங்களில் மே மாதம் 23-ந்தேதி நடக்கிறது.

இதற்காக அங்கு 8 அறைகள் (ஸ்ட்ராங் ரூம்) தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் வாக்கு எண்ணிக்கைக்கும் 8 அறைகள் தயார் செய்யப்பட உள்ளன.

லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக்கில் 11 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும், மோதிலால்நேரு பாலிடெக்னிக்கில் 12 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக 2 மையங்களிலும் தலா 13 டேபிள்கள் போடப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அருண் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதேபோல் காரைக்காலில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும், மாகி, ஏனாமில் தலா ஒரு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு