கலவை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலவை புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகம் தற்காலிகமாக கலவை-வாழைப்பந்தல் சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாலுகா அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அவ்வப்போது அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
கலவை புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக கலவை சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கலவை தாசில்தார் இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் திருமால், ஸ்ரீதர் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.