மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் 4,860 பேரின் வாகன உரிமம் தற்காலிக ரத்து

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் 4,860 பேரின் வாகன உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் நடக்காத வண்ணம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கந்துவட்டி குறித்து புகார் தெரிவித்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டு வாகன விபத்தில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். 440 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு வாகன விபத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். 350 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் இந்த ஆண்டு வாகன விபத்தை தடுக்க, 39 ஆயிரத்து 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4,860 பேரின் வாகன உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது