மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் முள்படுக்கையில் படுத்தவாறு பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி பெண் சாமியார் முள் படுக்கை மீது படுத்தவாறு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் 48 நாட்கள் விரதம் இருந்து முள்படுக்கையில் ஏறி நின்றபடியும், ஆக்ரோஷமாக ஆடியபடியும் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 43-வது ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி நேற்று காலை பூங்காவனம் முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாகராணி அம்மையார் அருள்வாக்கு வழங்குவதற்காக கோவில் முன்பு உள்ள திடலில் உடைமுள், இலந்தை முள், கற்றாலை முள் உள்ளிட்ட பல்வேறு வகையான முட்களை கொண்டு சுமார் 7 அடி உயரத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் சுவாமி நாகராணி அம்மையாரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு பெறுவதற்காக கோவில் முன்பு திரண்டனர். அதன் பின்னர் நேற்று மதியம் நாகராணி அம்மையார் முள்படுக்கை மீது ஏறி நின்றபடியும், சாமியாடியும், முள் படுக்கையில் படுத்த நிலையிலும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் முள் படுக்கையில் இருந்து கீழே இறங்கி வந்த நாகராணி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் மற்றும் மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரிமுத்து சுவாமிகள் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு