மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000- நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தென்காசி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

பொதுமக்கள் வாங்கி சென்றனர்

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரே நேரத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்கும் விதமாக நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 635 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 561 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். குறைவான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கட்டங்கள் போடப்பட்டு இருந்தன. அந்த கட்டங்களில் நின்று பொதுமக்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு