மாவட்ட செய்திகள்

தேனியில் பரிதாபம்: ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு

தேனியில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலியானான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய 2-வது மனைவி சுதா. இவர்களுடைய மகன் தாமஸ் என்ற குட்டி (வயது 13). தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து பள்ளிச் செல்வதாக கூறிச் சென்ற குட்டி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் சுதா புகார் செய்தார். அதன்பேரில் மாணவனை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவன் படித்த பள்ளிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது, நேற்று முன்தினம் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அதேபோல் மேலும் சில மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்ததால், பள்ளிக்கு வராத பிற மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மாணவர்கள் சிலர் பள்ளிக்கு செல்லாமல் புத்தக பைகளை தேனியில் ரெயில்வே தண்டவாளம் அருகில் வைத்து விட்டு கொட்டக்குடி ஆற்றில் குளித்ததாகவும், அப்போது குட்டி நீரில் மூழ்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தேனி கொட்டக்குடி ஆற்றில் தடுப்பணை பகுதிக்கு தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். குட்டியுடன் குளிக்க சென்ற மாணவர்கள் 2 பேரையும் உடன் அழைத்து சென்று குளித்த இடத்தை அடையாளம் கண்டனர்.பின்னர், தேனி தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் மாணவனின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. குட்டியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

பின்னர், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்