மாவட்ட செய்திகள்

திருவாரூரில், மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி திருவாரூரில் மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருவாரூர்:

வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி திருவாரூரில் மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் உடனடியாக கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். வருமான வரி வரம்புக்கு கீழ் வருமானம் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ஐ வழங்கிட வேண்டும்.

கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டம்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி அதற்கு ஆதரவாக நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, எல்.பி.எப். மாவட்ட தலைவர் குருநாதன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் நிர்வாகிகள் முருகையன், மகாதேவன், சந்திரசேகர ஆசாத், வைத்தியநாதன், பழனிவேல், அனிபா, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு